பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்களும், முதுமையை ஒத்திப் போடும் சத்துக்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் அந்தப் பழங்களே உடல் தீங்குகளை ஏற்படுத்துவதாக அமையுமானால்...?
கண்ணுக்கு இனிமையானது வண்ணமயமான பழங்களும், பச்சைப்பசேல் காய்கறிகளும். நமக்கு பழங்களை எடுத்துக் கொள்ளக்கூறி நிறைய பேர், மருத்துவர்கள் பெரும்பாலும், பரிந்துரை செய்கின்றனர். ஆனால் இயற்கையின் குழந்தையான அந்தப் பழங்கள் எந்த அளவுக்கு இயற்கையின் பொருளாக நம்மை வந்தடைகிறது என்பது ஒரு பெரிய கேள்வியே.
சமீப காலங்களாக பழங்களை பழுக்கவைக்கக் கடைபிடிக்கப்படும் செயற்கை முறைகளை பற்றி செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. குறிப்பாக நாம் மாம்பழங்களை பழுக்க வைக்கும் செயற்கை முறை பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளோம்.
பழுக்காத பழங்களை வியாபார்கள் பறித்து அதனை ரசாயனம் மூலம் பழுக்கச் செய்கின்றனர்.
சில ஆண்டுகளாக 'எத்ய்லீன்' என்ற ரசாயனம் பழங்களை செயற்கையாகப் பழுக்கவைக்கப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அது தடை செய்யப்பட்ட பிறகு ஈதேன், கால்சியம் கார்பைடு, எதிஃபான் போன்ற ரசாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இந்த ரசாயனங்களை பழங்களை அதன் பழுக்கும் காலத்திற்கு முன்பே பழுக்க வைப்பதன் மூஅல்ம் உடல்நலக் கேடுகள் ஏற்படுகிறது.
எதிலீன் என்ற ரசாயனம் நமது நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடியது. கண்கள், சருமம், நுரையீரல், நினைவு ஆகியவை பாதிக்கப்படுவதோடு, நீண்ட கால பயன்பாட்டினால் பிராணவாயு சப்ளையையும் குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்சொன்ன ரசாயனங்களில் எதிபான் தடைசெய்யப்பட்டுவிட்டது. இதனால் வியாபாரிகள் தற்போது 'பெதிலீன்' என்ற ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர். பெதிலீன் உடல் தீங்குகளை ஏற்படுத்தாது என்றாலும், ருசியை மாற்றிவிடக்கூடியது. மேலும் அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கங்களை பாதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
பெதிலீனை பயன்படுத்துவதற்கு வரம்புகள் உள்ளது. ஆனால் வியாபாரிகள் பெதிலீனை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
எனவே காய்கறிகள், பழங்களை வாங்கும்போது அதில் நகக்குறிகள், ஓட்டைப் போடப்பட்டுள்ள குறிகள், அல்லது அதன் மேல் பொடித்தூவியது போன்ற குறிகள் இருந்தால் அந்தப் பழங்களை வாங்கவேன்டாம்.
பொதுவாக பழங்களை, காய்கறிகளை வாங்கியபிறகு அதனை ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் எலுமிச்சையைப் போட்டு நன்றாகக் கழுவுவது சிறந்தது. சிறிது நேரம் கழுவிய பிறகு காய்ந்த பிறகு உட்கொள்வது சிறந்தது.
No comments:
Post a Comment